உ.பி.யில் பாம்பு கடித்த தம்பி மயங்காமல் இருக்க, வழிநெடுகிலும் கன்னத்தில் அறைந்து அண்ணன் அவரைக் காப்பாற்றியுள்ளார். தூங்கினால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார் என மருத்துவர்கள் கூறியதால், ஆம்புலன்ஸில் 150 முறை அறைந்து விழிப்போடு வைத்துள்ளார். தம்பி தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி நலமடைந்து வரும் நிலையில், அண்ணனின் பாசப் போராட்டத்தை மருத்துவர்களும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.
