Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு!” கர்நாடகாவுக்கு எதிராக விவசாயிகள் மனு

“ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு!” கர்நாடகாவுக்கு எதிராக விவசாயிகள் மனு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக முதல்வர், தமிழக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வழங்க கோரி திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மாணிக்க விநாயகரிடம் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் மாணிக்க விநாயகர் சன்னதியில் மனு அளித்தார். தொடர்ந்து மனுவை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார்.

கூட்டத்திற்கு பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார், அதில்:-

தவெக தேர்தல் வாக்குறுதியின்படி, சிறு-குறு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் மற்றும் பெரிய விவசாயிகள் வாங்கிய கடன்களில் 50% தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் கர்நாடகாவில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால், விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியினால் அனைத்து வகை விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து, அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் சென்னைக்குச் சென்று போராட்டம்
செய்யலாம் என்று இருந்தோம் ஆனால் காவல்துறையினர் எங்களை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. எனவே, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதியன்று (4.9.26) டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளோம். இந்நிலையில் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் மாணிக்க விநாயகர் கடவுளிடம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்தோம். தமிழக முதல்வரை கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என சொன்ன கர்நாடக முதல்வர் சிவகுமார் தமிழகம் வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது முதல்வரை வரவிடாமல் தடுக்கின்றனர் ஆனால் நாம் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம் என்றார்.

error: Content is protected !!