திருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை மீது ஏறிய மும்பையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தர்ஷன்ராவல் மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், மாயமான இளைஞரை கண்டறிய அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மலையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் நடைபெற்று வருகிறது.
