Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகர் பகுதியில் தொடர் திருட்டுகள்… பொதுமக்கள் பீதி

திருச்சி மாநகராட்சி 56 -வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி பாலசுப்ரமணியன் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் கடந்த ஒரு மாத காலமாக இதுவரை இல்லாத அளவுக்கு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கருமண்டபம் ஐஓபி நகர் , கணபதி நகர் , அசோக் நகர் தெற்கு இரண்டாம் தெரு ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று உள்ளது. இன்று அசோக் நகர் தெற்கு இரண்டாம் தெருவில் ஒருவரது இருசக்கர வாகனம் திருட்டுப் போய் உள்ளது ஆகவே கருமண்டபம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!