Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

வௌிநாட்டில் வேலை... ரூ. 8லட்சம் மோசடி...திருச்சி க்ரைம்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ 8 லட்சம் மோசடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என் ரெங்கராஜ் (36). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
இந்த நிலையில் திருச்சி கே கே நகரில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாக அறிந்து இங்கு வந்துள்ளார் பின்னர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுபேஷ் நாராயணன் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் வெளிநாடு செல்வதற்காக ரங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மாதவராஜ் மாரியப்பன் ஆகியோர் ரூபாய் 7,78,500 பணத்தை கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் கொடுத்தனர் அதன் பின்னர் வெளிநாடு செல்ல எந்த ஏற்பாடும் செய்யவில்லை பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ரங்கராஜ் சுபேஷ் நாராயணனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார் ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார் அதைத் தொடர்ந்து ரங்கராஜ் கே கே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி சுபேஷ் நாராயணன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கிரானைட் குவாரி அதிபரிடம் ரூபாய் 2 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சியில் போலீசார் விசாரணை

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72) இவர் கரூர் பகுதியில் ஒரு கிரானைட் குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஒரு அரசு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு உங்களது குவாரிக்கான குத்தகை காலம் காலாவதி ஆகிவிட்டது அதனை புதுப்பிக்க ரூபாய் இரண்டு லட்சம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார் இதனை நம்பிய தனபால் அந்த மர்ம ஆசாமி கொடுத்த வங்கி கணக்குக்கு ரூபாய் 2 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட தனபால் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி பெல் ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த ஜமால் முகமது (வயது 24) என்பவரை கைது செய்தார் அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சு போன்றவை கைப்பற்றப்பட்டது.

தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைதுமேலும் 3 பேர் மீது வழக்கு

திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா இவரது மகன் பவித்ரன் (வயது 19) இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
அவர் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத்
திரும்பிய போது
நடு கொண்டையம் பேட்டை பகுதியில் உள்ள ஒரு குளிர்பான கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திருவானைக்கோவில் காக்கூர் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் பங்களாதேஷைச் சேர்ந்த மணிஷ் ஆகிய இரண்டு பேரும் வேண்டுமென்றே பவித்ரனின் தலையில் தட்டினார்கள், அதன்பின் பவித்ரன் அந்த இடத்தை விட்டுச் சென்றார். மீண்டும் பவித்ரன் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட
ஸ்ரீதர் மனிஷ மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீராம் ( 21 ) ராஜி என்கிற ராஜ்குமார் (23) ஹரிஷ் ஆகிய ஐந்து பேரும் பவித்ரனை அருவருப்பான வார்த்தைகளால் திட்டி, உதைத்து, கல்லால் தாக்கினர். இதைப் பார்த்து அவரது சகோதரி அவர்களை தட்டி கேட்டார்.அவர்கள் அவரைத் திட்டி, அவரது கையைப் பிடித்து இழுத்து, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர். பவித்ரன் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் ஸ்ரீராம், ராஜி என்கிற ராஜ்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் மற்ற மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!