Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கத்தியால் குத்தி பணம்-செல் போன் பறிப்பு…

காஞ்சிபுரம் மணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (27) இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருச்சி வந்த அவர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஒட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஆஸ்மா பிரச்சனை இருந்ததால் மருந்து வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்பொழுது பொன்னகர் சர்வீஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த கார்த்தியிடம் அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் கார்த்தியை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து கத்தியால் உடம்பை கிழித்து அவரிடம் இருந்த 2000 பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கார்த்தி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியிடம் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவிசி
தேடி வருகின்றனர்.

error: Content is protected !!