முருகருக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் முருகரும் திமுக வுக்கு தான் வாக்களித்திருப்பார் சேகர் பாபு பேட்டி
- சமூக வலைதளங்களில் தவெக வின் கருத்துக்களை பார்த்தால் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என மாபியா கும்பல் செயல்படுவது போன்று உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேட்டியளித்த அவர்,
உலக தெய்வங்களில் பெண்ணரசி என்று போற்றப்படும் தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன்,4 மாதங்கள் மீனாட்சி என்றால் 8 மாதங்கள் சொக்கநாதர் அருள்,அந்த திருக்கோயில் வீர வசந்தராயர் மண்டபம் 2018 தீ விபத்தில் சேதடைந்தது, நானும், அமைச்சராக மூர்த்தியும் நேரடியாக நாமக்கல் சென்று கல் தேர்வு செய்து
79 கல் தூண்களோடு வீர வசந்தராயர் மண்டபம் பணிகள் முடிவடைந்துள்ளது,
உலகில் இருக்கும் இந்து திருக்கோயிலுக்கு குடமுழுக்கு தேதி குறிக்கும் வல்லுனர்களின் கேட்டு 17.9 26 அன்று தேதி குறிப்பிடப்பட்டது,
அந்த குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழில் 10 இடங்களில் பிழை உள்ளது,
ஹிந்து சமய அறநிலைய துறை கொடைகள் சட்டம் திருக்கோயில் நிர்வாக பொறுப்பு அடங்காவலர் குழுவை சார்ந்தது,
அறங்காவர்கள் குழு ஒப்புதல் அளித்தால் தான் இந்த குடமுழுக்கு பணிகள் நடைபெற்றது,
அறங்காவல் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் அவர்கள் பெயரும் இடம்பெறவில்லை,
இதையெல்லாம் எடுத்து கூறியுள்ளோம் இந்த பிழைகளை திருத்த வேண்டும்,
அனைத்து இடங்களிலும் அறங்காவல் குழுவில் தகுதியானவர்களை தான் நியமித்து உள்ளோம்,
சமூக வலைதளங்களில் திமுகவினர் மீது தவெ பரப்பும் கருத்துக்களைப் பார்த்தால் அவதூறு கருத்துக்கள் அள்ளித் தெளிக்கிறார்கள் இதனைப் பார்த்தாலே அரசியலுக்கு யாரும் வர கூடாது என ஒரு மாபிய கும்பல் செயல்படுகிறது
அறங்காவல் குழுவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு போதிய விண்ணப்பங்கள் வராததால் மூன்று முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது,
வேவு பார்ப்பதாக கூறுகிறார் வேவு பார்பது திமுக வேலையில்லை மக்களுக்கு வேலை பார்பது தான் திமுக பணி,
முருகனுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் அந்த முருகனே திமுகவுக்கு தான் வாக்களித்திருபார் அந்த அளவிற்கு முருகரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.
