Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெங்கல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை- பட்டப்பகலில் பயங்கரம்..

வெங்கல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை- பட்டப்பகலில் பயங்கரம்..

பட்டப்பகலில் பயங்கரம் – வெங்கல் அருகே ஒருவர் வெட்டிக்கொலை..!

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே பாகல்மேடு பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் மாரிமுத்து என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக மாரிமுத்து சென்றுகொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனங்களில் வந்த 3-க்கும் மேற்பட்டோர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, மாரிமுத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? வழக்கு தொடர்பான விவகாரமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவத்தால் வெங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!