தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே ஆதனூர் கிராமத்தில், மதுபோதையில் பெற்றோருடன் தகராறு செய்த மகன் கருப்பசாமி (21)யை, தந்தை மாரிமுத்து (50) அரிவாளால் வெட்டி கொலை செய்தார். நேற்று இரவு நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகன் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வதே கொலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.
