திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார் அந்த வாலிபர் திடீரென்று செல்போனை கீழே போட்டுவிட்டு,அவ்வழியாக வந்த டிப்பர் லாரி முன் பாய்ந்தார் இதில் அவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்இதுகுறித்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் ? எதற்காக டிப்பர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்தார் 2என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது இச்சம்பவம் திருச்சி கிராப்பட்டி பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
