மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மத்யம்கிராம் பகுதியில் ஜெஸ்சூர் சாலையில் உள்ள சர்வதேச கார் விற்பனையகத்தில் அதிகாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இதில் 30 கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையம் 5 முதல் 6 கி.மீ. தொலைவில் இருந்தபோதும் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.
