கோவையில் விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய நபரை – போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்சன்ரோடு பகுதியில் வழக்கு தொடர்பாக விசாணைக்கு சென்ற உக்கடம் தலைமை காவலர் அப்பகுதி மக்களிடம் விசாரணையில் ஈடுபட்டதை அலுவல் தேவைகளுக்காக புகைபடம் எடுத்து உள்ளார். இதை பார்த்த அருகில் நின்று இருந்த ஆட்டோ ஓட்டுனர் அக்பர், இங்கே வந்து விசாரணை நடத்துவதாக இருந்தால் என்னிடம் அனுமதி வாங்கி விசாரிக்க வேண்டும் என்றும், நீ புது போலீஸ் அதுனால தப்பிச்சிட்ட, பழைய போலீசாக இருந்தால் ஓட விட்டு இருப்பேன் என்று மிரட்டி உள்ளார்.
இதை அடுத்து தலைமை காவலர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் அக்பரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
