காவலாளி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை
திருச்சி திருவானைக்காவல் கீழே உள் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (22) இவர் தில்லைநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திலகாவலாளியாக பணிபுரிந்து வந்தார் இவரது மனைவி சரஸ்வதி (வயது 22) இருவரும்காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை.
மனைவி சரஸ்வதிதிருவானைக்காவலில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய ராஜ்குமார் தனது மனைவி சரஸ்வதியை திருவானைக்காவல் ஹோட்டலில் அழைத்துச் சென்று இறக்கி விட்டார். பிறகு வீட்டில் சென்று தூங்குவதாக கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் வேலை முடிந்து மாலையில் சரஸ்வதி வீட்டிற்கு வந்து பார்த்தபோதுராஜ்குமார் துணி காயவைக்கும் கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நகைக்கடையில் தங்க சேமிப்பு திட்டத்தில் ரூ.ஒரு லட்சத்து 58 ஆயிரம் மோசடி
மேலாளர் மீது வாடிக்கையாளர் போலீசில் புகார்
திருச்சி ஆக 26-திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி நாக நந்தினி (வயது 50)இவர் திருச்சியில் உள்ள பிரபலநகைக்கடையில் தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும்ஜிபேவில் பணம் செலுத்தியிருந்தார்.
இந்நிலையில் ரூபாய் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பணம் சேர்ந்த விட்ட நிலையில் அந்த பணத்தை கட்டியதற்கான ரசீதை கேட்க நகை கடைக்கு சென்றபோதுஅங்கு மேலாளர் இல்லை. இதை எடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது நிர்வாகத்தினர் தர இயலாது என்று கூறிவிட்டனர். இதையடுத்துநாகநந்தினி கோட்டை போலீசில் அந்த நகை கடையின் மேலாளர் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
