நேபாள நாட்டின் கோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளமானது இன்னும் சில மணி நேரங்களில் பீகார் மாநிலத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமையை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
