உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை போலீசார் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இதற்காக முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
