நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளம், நிலச்சரிவு காரணமாக சுமார் தமிழகத்தை சேர்ந்த 50 பேர் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 50 தமிழர்கள், வௌ்ளம் காணரமாக தவித்து வருகின்றனர். காத்மாண்டுவிலிருந்து சுமார் 150 .கி.மீ வடக்கே உள்ள

திமுரே பகுதியில் சிக்கியுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் திமுரே, சியாப்ருபெசி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.நேபாளத்துக்கு புனிதப் பயணம் சென்று சிக்கித் தவிக்கும் தமிழக பக்தர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளனர். நேபாளம் போட்டோகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
