Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருத்தணி கோயில் நாளை 4 மணி நேரம் மூடல்!

திருத்தணி கோயில் நாளை 4 மணி நேரம் மூடல்!

திருத்தணி முருகன் கோயிலில் நாள்தோறும் காலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவணி அவிட்ட நாளான நாளை (ஆகஸ்ட் 27) மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆவணி அவிட்டச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

இந்தச் சிறப்புப் பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, நாளை பகல் 12:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை 4 மணி நேரத்திற்குத் திருக்கோயில் நடை சாத்தப்பட்டு தரிசனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பூஜைகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், மாலை 4:00 மணிக்கு மீண்டும் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே நாளை திருத்தணிக்கு சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் இந்த நேரக் மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களின் ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிடுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!