நீலகிரி மாவட்டம் ,கூடலூர் அருகே இரண்டு பேரை கொன்ற புளியை பிடிக்க வலியுறுத்தி 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலுார் லாரஸ்டன் பகுதியில், ஆகஸ்ட் 9ம் தேதி பாலகிருஷ்ணன், 60, ஆகஸ்ட் 21ம் தேதி ரவிச்சந்திரன், 56, ஆகியோர் புலி தாக்கி பலியாகினர். இது தொடர்பாக புளியை பிடிக்க வலியுறுத்தி மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியை பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் மெத்தனம் காட்டிய வருவதாக அரசியல் கட்சியினர், விபரி சங்கத்தினர் மற்றும் பொதுநல அமைப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இப்பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சிகள், வியாபாரிகள், ஓட்டுநர் சங்கங்கள் சார்பில் பந்தலுார் பகுதியில், 48 மணி கடையடைப்பு போராட்டம் நேற்று தொடங்கி நிலையில் இன்று 2 வது நாளாக தொடர்கிறது.
நேற்றும் இன்று கூடலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட கடைகளானது இரண்டு நாட்களாக அடைக்கபட்டுள்ளது. நேற்று இரவு கூடலூர் வழியாக வந்த கேரளா செல்லக்கூடிய வாகனங்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இப்பகுதியில் நூறுகணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக எல்லையில் இருந்து கேரளதிற்கும் செல்லும் வாகங்களுக்கும் கேரளத்தில் இருந்த தமிழ்நாட்டிற்கும் செல்லும் வாகங்களுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தமிழக அரசு விரைந்து புளியை படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.
