Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக கவுன்சிலர் மீதுபோதை ஆசாமிகள் தாக்குதல்!- தாம்பரத்தில் பரபரப்பு!


சென்னை சேலையூரை அடுத்த பதுவஞ்சேரியை சேர்ந்தவர் வாட்டர் ராஜ்‌வயது 58. தாம்பரம் மாநகராட்சி, 69வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர். இந்த நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு, பதுவஞ்சேரி சமுதாய நலக்கூடத்தில் தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்ததால் மோட்டரை நிறுத்த இருசக்கர வாகனத்தில் சமுதாய நலக்கூடத்திற்கு சென்றார்

மோட்டரை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தை வெளியே வரும்பொழுது அங்கு இருந்த மூன்று போதை ஆசாமிகள் கேட்டை மூடிவிட்டனர் கேட்டை திறக்கும் படி இவர் கூறிய போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாட்டர் ராஜை சரமாரியாக தாக்கினர் இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்தது உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி செய்து விட்டனர்

இதில் படுகாயம் அடைந்த வாட்டர் ராஜை சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்

அதிமுக மாநகராட்சி கவுன்சிலர் தாக்கப்பட்டு சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான அதிமுகவுடன் மருத்துவமனையில் குவிந்தனர் இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விசாரணையில் கடந்த மாதம் பதுவஞ்சேரி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தகராறு ஈடுபட்ட நபர்களை வாட்டர்ராஜ் தட்டி கேட்டு அந்த பகுதியில் இருந்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது இதில் ஆத்திரம் அடைந்த நபர்கள் அவர் தனியாக வந்தபோது தாக்குதலில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாநகராட்சி கவுன்சிலரை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்

error: Content is protected !!