சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், ஆபத்து காலங்களில் மக்கள் 108 ஆம்புலன்ஸை அழைப்பது போல தங்கள் அச்சத்தை போக்க தமிழக மக்கள் 108 எம்.எல்.ஏக்களை தவெகவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனக்கு வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த கோவை வடக்கு தொகுதி மக்களுக்கும், களத்தில் உழைத்த தவெக சொந்தங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.
108 ஆம்புலன்ஸ் போல MLA-க்களை மக்கள் வழங்கியுள்ளனர்
