அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026-ல் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், இந்த பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். “அபார மதிநுட்பத்துடன் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்; இந்த மகத்தான வெற்றி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது” என முதல்வர் பாராட்டியுள்ளார்.
