தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவதை போல, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பினை ரேஷன் கடை வாயிலாக வழங்க அரசு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
