Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த நபர் கைது- திருச்சி க்ரைம்

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து வந்தவர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரதியார் தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் முத்துக்குமார் (54) இவர் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது இவரது உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி அருள்ஜோதி தலைமையிலான இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின் போது இவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டில் பயணித்தது தெரியவந்தது. உடனடியாக இமிகிரேஷன் அதிகாரிகள் இவரை ஏர்போர்ட் போலீஸில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி இவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தார். பின்னர் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

குளியல் அறையில் மயங்கி விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 6 -வது தெருவை சேர்ந்தவர் சேவியர் அந்தோணிசாமி (வயது 81 ) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது மகன் ஜோசப் இவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த பெண்

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் பீர் முகமது. இவரது மனைவி பரக்கத் நிஷா (வயது 48). இவருக்கு ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது உறவினர் அளித்த தகவலின் அடிப்படையில் தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!