தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.28) 9 மாவட்டஙக்ளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
