Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்… உதயநிதி ஸ்டாலின்

என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்... உதயநிதி ஸ்டாலின்

என்னுடைய அரசியல் ஆசான் அண்ணன் தொல். திருமாவளவன்’ என்று எப்போதும் பெருமையாகச் சொல்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் இடையே இருந்தது வெறும் தேர்தல் கூட்டணி கிடையாது. அது ஒரு கொள்கைக் கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் என்று பல முறை சொல்லி இருக்கிறேன். அவருக்கு என்றுமே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எந்தெந்த MLA-க்களுக்கு கார் வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் வாங்கிக்கொடுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவின்படி திமுக MLA-க்களுக்கு கார் வேண்டாம்.

கார் ரேஸைப் பற்றி பேசுவதன் மூலம் நீங்கள் எங்களைக் கொச்சைப்படுத்தவில்லை. அந்த விளையாட்டு வீரர்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். 2007ஆம் ஆண்டு கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டபோது அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய், ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையைவிட குறைவான விலைக்கு வழங்கினார்கள். சிறப்பு பொது விநியோகத் திட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

error: Content is protected !!