பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 4 பேரை மயிலாப்பூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து சுமார் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
