டாஸ்மாக் கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நாளை முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் இன்று (ஆக.31) அறிவித்துள்ளார். இதன்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,000, விற்பனையாளர்களுக்கு ரூ.30,000 மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,000 என ஊதியம் உயர்த்தப்படுவதுடன், பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும் 8 மணி நேர வேலை, வார விடுமுறை, தற்செயல் விடுப்புகள் போன்ற 6 முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
