மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுப்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.31) தீர்மானம் கொண்டு வந்தார். கர்நாடக அரசின் இந்த ஒருதரப்பான நடவடிக்கைகளுக்கு கண்டனத்தை பதிவு செய்த அவர், இத்திட்டம் புதுச்சேரி மக்களின், குறிப்பாக காரைக்கால் பகுதி விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார். காவேரி நதியின் கீழ்மடை பகுதியான புதுச்சேரியின் உரிமை மற்றும் நதிநீர் பங்கீட்டை பாதுகாக்கும் வகையில் இந்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
