உச்ச நீதிமன்ற நீதிபதி போல நடித்து ஜாமின் பெற முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2017-ல் ஊழல் வழக்கில் சிறையில் இருந்தபோது, சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பேசுவதாகக் கூறி, ஜாமின் வழங்குமாறு நிர்பந்தித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
