தேனி: கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் புளிய மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சண்முகா நதி அணை சாலையின் வளைவில் திரும்பிய போது மரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காரில் பயணித்த பிரதீப், முத்துக்குமார் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
