நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்களை தேடி அங்கு செல்லும் உறவினர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு 3 சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. இதன்படி காத்மாண்டுவில் உள்ள அதிகாரிகளான சத்ய சிவம் (98682 07259), தினேஷ் கண்ணன் (98685 30799) மற்றும் அஜய் (98682 24049) ஆகியோரை தொடர்புகொண்டு காணாமல்போனவர்களை தேடி செல்பவர்கள் உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
