Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய் கையை பிடித்து அழைத்துச்சென்ற மூதாட்டி

மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்ட பிறகு, முதலமைச்சர் விஜய் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே விவசாயி ஒருவரின் வீட்டிற்கு திடீரென சென்று முதலமைச்சர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அங்குள்ள மூதாட்டி முதல்வரின் கையைப் பிடித்துத் தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி செல்லம், “திடீரென முதல்வர் வந்ததால் என்ன

பேசுவதெனப் புரியவில்லை; உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் கண்ணு என அவரிடம்

அன்போடு கூறினேன்” என்றார்.

மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபின் புறப்பட்ட முதலமைச்சர், சின்னகாவூரில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு சென்றார். அவரை மூதாட்டி ஒருவர் கையை பிடித்து அழைத்துச் சென்றார். அப்போது, தனது கூளிங் கிளாசை மூதாட்டிக்கு முதலமைச்சர் பரிசளித்தார். விவசாயி குடும்பத்தினருக்கு புதிய ஆடைகளை வழங்கி மகிழ்ச்சி கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், அங்கிருந்த மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

error: Content is protected !!