Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநில அளவில் அசத்திய திருச்சி மாணவர் அணி!..

மாநில அளவில் அசத்திய திருச்சி மாணவர் அணி!..

சென்னை விநாயாக மெஷின் கல்லூரியில் மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 24 அணிகளும் கலந்துகொண்டு போட்டியிட்டது. ஆண்கள் பிரிவு இறுதி சுற்றில் திருச்சி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாணவர்கள் (எஸ்.டி.ஏடி), சென்னை டான் பாஸ்கோ இரண்டு அணிகள் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 5க்கு 3 போட்டிகளில் திருச்சி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாணவர்கள் அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை சென்னை டான் பாஸ்கோ அணி பிடித்தது. வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர்களுக்கும் பயிற்சியாளர் பாஸ்கருக்கும் விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!