திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் இவரது மகள் தீபலட்சுமி/12 வேப்பம்பட்டு அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார் மாணவி வழக்கம் போல் பள்ளி முடிந்து தனது சைக்கிளில் வீடு திரும்பிய போது வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகர் பிரதான சாலையில் சென்ற நிலையில் அதே வழியில் எதிர் திசையில் வந்த கிரேன் மாணவி மீது மோதி தலையில் கிரேன் டயர் ஏறி இறங்கியதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
இறந்து போனார் இதனை கண்ட பொதுமக்கள் பதறி அடித்து ஓடிய நிலையில் கிரேன் ஓட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓடினார் இதனை அடுத்து கிரேனை சுற்றி வளைத்து உறவினர்கள் பொதுமக்கள் மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கிரேன் ஒட்டி வந்த அயப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ்/40 என்பவரை கைது செய்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மீது கிரேன் மோதி பரிதாபமாக இறந்து போனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சாலையின் ஓரமாக மெதுவாக சென்ற சிறுமி மீது வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் அதிவேகமாக ஓட்டி வந்ததால் விபத்துக்கு காரணம் என்றும் வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் பணி காரணமாக அப்பகுதியில் விபத்து அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கும் நிலையில் இந்த விவாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்..
