தமிழக சட்டப்பேரவையில் பேசியதாவது,கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை ₹350 → ₹600 ஆக உயர்வு.
கடல் மீன் வளத்தை பெருக்க கடலோர மாவட்டங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள், மீன் குஞ்சுகள் இருப்பு திட்டம் விரிவாக்கம்.
கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் புதிய மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு.
நன்னீர் இரால் வளர்ப்பை ஊக்குவிக்க இறால் இனப்பெருக்க மையம், கடற்பாசி மற்றும் கடல் கூண்டு மீன் வளர்ப்புக்கு மானிய உதவி.
Aqua Zones மற்றும் நீர்வாழ் மண்டலங்களின் அறிவியல் பூர்வமான வரைபடம், கடலோர வளங்கள் மதிப்பீடு.
திருவொற்றியூர், சின்னமுட்டம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் நவீன வசதிகள் மற்றும் டிஜிட்டல் மீன் ஏலக்கூடங்கள்.
கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் வலுப்படுத்தப்படும்.
சென்னையில் சர்வதேச கடல் உணவு கண்காட்சி மற்றும் சமையல் திருவிழா நடத்தப்படும்.
மீன்வளப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சர்வதேச ஆராய்ச்சி பயிற்சி, AI மற்றும் நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும். ஆய்வகங்கள் NABL அங்கீகாரத்துடன் வலுப்படுத்தப்படும்.
🇱🇰 அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை ₹500 → ₹600 ஆக உயர்வு.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ₹1.86 கோடி நிவாரண உதவி.
