ரஷ்யாவில் தன்னை தள்ளிவிட்ட நபரை, ரோபோ ஒன்று தாக்க முயன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ விற்பனை செய்யும் கடைக்கு வந்த அந்த நபர் முதலில் அங்குள்ள விற்பனையாளரிடம் கைக்கொடுக்கிறார். தொடர்ந்து அங்கிருந்த ரோபோவுக்கும் அவர் கைக்கொடுத்தபோது, அது கண்டுகொள்ளாததால் விரக்தியில் அதனை தள்ளிவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரோபோ, அந்த நபரை தாக்க முயற்சித்தது. இதனையடுத்து ரோபோவை சமாதானம் செய்ய முடியாததால் அதனை ஆஃப் செய்து ஊழியர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
