சேலம் மாவட்டம் எடப்பாடியில் கிணற்றில் இருந்து கர்ப்பிணி கோகிலா சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது காதலன் அம்மாசியை போலீசார் கைது செய்தனர். கோகிலாவும் அம்மாசியும் காதலித்து வந்ததாகவும், கோகிலா கர்ப்பமான நிலையில் அவரை ஏற்றுக்கொள்ள அம்மாசி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் விசாரணை செய்து கோகிலாவை அம்மாசியுடன் அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கோகிலாவை அம்மாசி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
