Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை இல்லாத காரணத்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அங்கு உப்பு உற்பத்தி மும்முரமாக உள்ளது. இது குறித்து பேசிய உப்பு உற்பத்தி பணியாளர்கள் தொடர் வெயில் காரணமாக உப்பு உற்பத்தி இலக்கை எட்டியும், வேதாரண்யத்தில் தொடர்ந்து உப்பு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. கடுமையான வெயிலைத் தவிர்க்க தாங்கள் அதிகாலை 3 மணி முதலே பணியை தொடங்குவதாகவும் கூறி உள்ளனர்.

இதனிடையே அதிக உற்பத்தி மற்றும் கொள்முதல் விலை குறைவு காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து பேசி இருக்கும் உப்பு உற்பத்தியாளர்கள், நடப்பாண்டில் மழை பொய்த்து போய் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் வேதாரண்யத்தில் நடப்பு ஆண்டிற்கான உப்பு உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை 10 லட்சம் டன்னாக உப்பு உற்பத்தி உயர்ந்துள்ளதாக கூறி உள்ளனர். ஒருபக்கம் உப்பு உற்பத்தி அதிகரித்திருந்தாலும், கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். கொள்முதல் விலை பாதியாக குறைந்து விட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

error: Content is protected !!