நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது உண்டியல் சேமிப்பான ரூ.4,115-ஐ நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த ஓராண்டாக சேமித்த பணத்தை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஒப்படைத்தார். சிறுவனின் மனிதநேயத்தை கலெக்டர் பாராட்டியதுடன், அவரது செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
