ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றார். எதிர்பார்ப்பை விட அதிக சாதனைகளை படைப்போம் என நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த நிதியாண்டில் மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறினார். வரும் ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் தெரிவித்தார்.
