“தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்” என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறிய அவர், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 1,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
