Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில் ஆலையின் சில அறைகள் பலத்த சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், எரியும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. காவல்துறையினரும் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!