தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியில், கடந்த செப்.3-ம் தேதி கச்சா எண்ணெய் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட முயன்றபோது கடுமையான நச்சு வாயு காற்றில் பரவியது. இந்த விஷவாயுவை சுவாசித்ததில் 37 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தப்பிக்க முயன்ற பலர் அருகில் உள்ள போனி ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியும், இதுகுறித்த காவல்துறை விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
