சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு பதிவுசெய்யும் முறையை கைவிட்டு, செயலியில் OBC சாதி பட்டியலை இணைத்து தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். OBC பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர சாதிகள் அல்ல என்று அரசு கூறும் பலவீனமான காரணத்தை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சாதிவாரி தரவுகளை துல்லியமாக சேகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
