Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது

நேருவின் தளபதியாக செயல்படுவோம் :

திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது.

முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சி செப் 6 –

திருச்சியில்
நடைபெற்ற திமுக கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது :
எனக்கு ஒன்று என்றால் நேருவும் அவருக்கு ஒன்று என்றால் நானும் கழகத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து நிற்போம்.
திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது.
நேருவின் தளபதியாக செயல்பட்டு இனி எந்த தேர்தல்கள் வந்தாலும் 100 சதவீதம் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டம்.
என்னையும் நேருவையும் பொன்னர் சங்கர் என ஸ்டாலின் கூறுவார்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களுக்கு திமுக பாதுகாப்பு வளையமாக இருக்கும்.
நேற்று நேரு வீட்டில் நடந்த சோதனையின் போது நான் அங்கு இருந்தேன். அந்த ஏழு மணி நேரத்தில் நிறைய பாடத்தை கற்று கொண்டேன்.
இனி யார் நிர்வாகிகளாக வந்தாளும் வரும் நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
திருச்சி கிழக்கு இடை தேர்தல் வரும் போது தேர்தலில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
டார்வின் கோட்பாட்டின்படி ஒரு உயிரினம் வலிமையாக இருப்பதால் மட்டுமே நீண்ட நாள் வாழ்வதில்லை சூழலுக்கு தகுந்தாற் போல் தன்னை தக்க வைத்து கொண்டால் தான் நீண்ட நாள் வாழ முடியும். திமுக காலத்துக்கு ஏற்றவாறு தன்னை தக்க வைத்து கொண்டதால் தான் இன்னும் இயக்கம் நிலைத்து நிற்கிறது.
கட்சியில் ஒருவருக்கொருவர் எந்த் வித சங்கடங்கள் வரக்கூடாது.
நமக்கு எதிராக இருப்பவர்கள் பொய்யர்களாகவே இருக்கிறார்கள் அவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்
இவ்வாறு மகேஷ் பொய்யா மொழி பேசினார்.

error: Content is protected !!