Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்… கே. என். நேரு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு தலைமையில் நடந்தது, கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
திமுக தலைவராக
மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திருச்சி திமுக நூறு சதவீதம் வெற்றியை பெற்றது 2026 சட்டமன்ற தேர்தலில் தான் நாம் ஏழு தொகுதிகளை இழந்துள்ளோம் மீண்டும் அந்த தொகுதிகளை நாம் வெற்றி பெற வேண்டும் அதற்காகத்தான் இந்த கூட்டம்.
இனி வரும் காலங்களில் நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்
மாநகரத்திற்கு இனி செயலாளர் கிடையாது. பகுதி செயலாளர்கள் மட்டுமே. பல மறுசீரமைப்பை தலைமை அறிவித்துள்ளது. அதன்படி செயல்பட வேண்டும் வயது மூத்தவர்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார். நீங்கள் இருந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும்.நீங்கள் தான் திமுக.
அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் உங்களுக்காக நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவேன் என தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு வழக்கறிஞர் க.வைரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன்,
மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், எஸ்.ஏ.அம்பிகாபதி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தலைமைக் கழகத்தின் சார்பாக வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., வேடசந்தூர் சாமிநாதன், எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் கதிரவன் எம்எல்ஏ., முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, எம். பழனியாண்டி, சவுந்தர பாண்டியன், கே. என்.சேகரன், ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன், மண்டலக் குழுத்தலைவர் மதிவாணன், வன்ணை அரங்கநாதன், பொருளாளர் துரைராஜ், தர்மன் ராஜேந்திரன், நிர்வாகிகள் சித்ரா ஹோட்டல் பாரிவள்ளல், கருணை ராஜா, முத்துச் செல்வம், லீலா வேலு, அல்லூர் கருணாநிதி, காஜாமலை விஐய், மோகன்தாஸ், நாகராஜன், வக்கீல் இளங்கோ, எம். ஏ. எஸ். மணி, கமால் முஸ்தபா,டி. பி. எஸ். எஸ். ராஜ்முகம்மது, ஆர். ஜி. பாபு, தில்லைநகர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, இளைஞரணி வெங்கடேஷ்குமார், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டலக் குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஜெயநிர்மலா மற்றும் அயலக அணி துபேல் அஹமது, இப்ராம்ஷா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் மே.க. கோட்டை செந்தில், மாவட்ட பிரதிநிதி மணிவண்ண பாரதி, மண்டி சேகர், சிறுபான்மை பிரிவு கே.எம். அக்பர், மாநகர சிறுபான்மை துணை அமைப்பாளர் பா. தஸ்தகிர், லோகநாதன், வாசவி சரவணன், ஏ. பி. ரகுநாதன், கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ராமதாஸ், சாதிக் பாட்ஷா, டி.பி.எஸ். தாஜீதின்,வட்டச் செயலாளர்கள் பி. ஆர். பால சுப்பிரமணியன், எஸ் சுருளிராஜன், எம்.ஆர்.சி. சந்திரன், பந்தல் எஸ். ராமு, அந்தோணிசாமி, பிராட்டியூர் மணிவேல், புத்தூர் சிவா, தென்னூர் அபூர்வ மணி,எம் ஆர் எஸ் குமார், மணிமாறன்,சிவலிங்கம்,ஆனந்தராஜ், திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருச்சி மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகர வட்ட கழகங்களில் மறுசீரமைப்பு பணிகளை தலைமை கழகத்தின் வழிகாட்டுதலின்படி விரைவாகவும் சிறப்பாகவும் செய்து சீரமைப்பு செய்யப்பட்ட பட்டியல்களை தலைமை கழகத்தில் விரைவில் ஒப்படைப்பது என தீர்மானிக்கப் பட்டது.

error: Content is protected !!