திருச்சியில் பரபரப்பு சம்பவம்
சிபிஐ அதிகாரி என கூறி பள்ளி ஆசிரியையிடம் ரூ 17 லட்சம் மோசடி
சைபர் கிரைம் போலீஸ் சார் விசாரணை
திருச்சி செப் 5 – திருச்சி அரியமங்கலம் வ உ சி தெருவை சேர்ந்தவர் பிலோமின் ராஜ் (வயது 67 )இவருடைய மனைவி திருச்சியில் பள்ளி ஆசிரியை யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ந் தேதி பிலோமின் ராஜின் மனைவியின் செல்போனுக்கு அதாவது பள்ளி ஆசிரியைக்கு ஒரு மர்ம ஆசாமி செல் போனிப் பேசினார். அப்பொழுது
அவர் தன்னை மதன்குமார் என்று பெயர்ரை
கூறி அறிமுகப்படுத்திவிட்டு தான் சிபிஐயில்
இருந்து பேசுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி தனியார் வங்கியில் புதிதாக ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அந்த வங்கி கணக்கிற்க்கு ஒரு பெரிய தொகை மாற்றப்பட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி ஆசிரியை எனக்கும், அதற்கும் சம்பந்தம் கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த மர்ம ஆசாமி பள்ளி ஆசிரியை மிரட்டும் தோணியில் பேசி தங்களை கைது செய்யாமல் இருக்க நீங்கள் பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியை பதற்றத்துடன் போனை வைத்து விட்டார். பிறகு மீண்டும் அந்த மர்ம ஆசாமி பேசி ஒரு வங்கி கணக்கு நம்பரை அனுப்பி அதில் ரூபாய் 17 லட்சம் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். இந்த மர்ம ஆசாமியின் பேச்சை நம்பிய பள்ளி ஆசிரியை நடந்த விவரத்தை தனது கணவர் பிலோமின் ராஜிடம் கூறினார். இதைக் கேள்வி பட்ட அவரும் பயந்து போய் சிபிஐ அதிகாரி தான் பேசுகிறார்கள் என்று நம்பி அந்த வங்கி கணக்கில் ரூபாய் 17 லட்சம் பணத்தை வங்கி மூலம் செலுத்தினர். பிறகு இந்த சம்பவம் குறித்து மற்றவரிடம் கூறும் பொழுது அவர்கள் அது போலியாக இருக்கலாம் என்று கூறினார்கள். இதையடுத்து அவர்கள் விசாரணை செய்த பொழுது அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும் பொய் சொல்கிறார்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ரூ 17லட்சம் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கை தொடர்ந்து சோதனை செய்து பார்த்தபோது அந்த சம்பவம் போலியானது என்பதும், தெரிய வந்தது. இது தொடர்பாக மீண்டும் அந்த மர்ம ஆசாமியின் செல் போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதையடுத்து தொடர்ந்து அந்த மர்ம ஆசாமியை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தங்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஏமாற்றியத்தை தெரிந்து கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பிலோமின் ராஜ் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேர்ப் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியைரிடம் ரூபாய் 17 லட்சம் பணத்தை மோசடி செய்த பெற்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
