உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டா கவுர் சிட்டி மால் கேஎஃப்சி (KFC) கிளையில் வாங்கிய ஃபிரைடு சிக்கனில் பூச்சிகள் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுப் புகார் தெரிவித்துள்ளார். இவ்வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கேஎஃப்சி இந்தியா நிறுவனம் வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அவரது ஆர்டர் விவரங்களையும் கேட்டுள்ளது.
