Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது – சபாநாயகர்

முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய கருத்துக்கள் அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க கொறடா எ.வ.வேலு பேரவையில் வலியுறுத்தினார். சட்டமன்றப் பேரவைக்கு என்று சில மரபுகள் உள்ளன. முதலமைச்சர் எப்போதுமே கண்ணியமாகவே பேசுவார்; ஆனால் தற்போதைய முதலமைச்சர் பேரவை மரபை மீறிப் பேசியுள்ளார். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு விவகாரம் குறித்து அவையில் பேச அனுமதி இல்லை. நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம். ஆனால், அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசியது அவையை மீறிய செயல்; அது விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்பது தி.மு.க.வின் கருத்து.

அமலாக்கத்துறை அரசின் சார்பில் சமர்ப்பித்த ஆவணம் குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் இருக்கும் அதனை முதலமைச்சர் ஆதாரமாக காட்டலாமா? சர்க்காரியா கமிஷனில் இவர்கள் தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், அதை வைத்து திமுக மீது மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்துவது அரசியல் ஆதாயத்திற்காகவா? மறைந்த முரசொலி மாறன் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? ஆகிய மூன்று முக்கிய கேள்விகள் திமுக சார்பில் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இது பற்றி ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்டது தான். ஆகையால் இதனை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாங்கள் பேசினாலே திமுகவினர் பயப்படுகின்றனர் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். தவெக ஆட்சியில் எந்தத் துறையிலும் திமுக போல் நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் எனவும் அவர் பேசினார். அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், “சர்க்காரியா கமிஷன் குறித்து பேசும் போது திமுகவினர் காது கொடுத்து கேட்கவில்லை. இதகுறித்து முன்னரே என்னிடம் கலந்தாலோசித்தார் முதல்வர். சர்க்காரியா கமிஷன் குறித்து பேரவையில் பலமுறை விவாதிக்கப்பட்டது. முதல்வர் அமலாக்கத்துறை அறிக்கையில் இருந்ததை தான் பிடித்தார். தீர்ப்பை பற்றி குறிப்பிடவில்லை. ஆகையால் சர்க்காரிய கமிஷன் மற்றும் மிசா குறித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறினார்.

error: Content is protected !!