அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
